Monday, April 9, 2012

அசோலா சாகுபடி முறை


அசோலா சாகுபடி முறை











தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழைக்கப்படுகிறது. பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம்.

மிக சிறிய இலையையும் துல்லியமான வேர்களையும் கொண்டவை. தண்டு மற்றும் வேர்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும்.

பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். வேகமாக வளரும் தன்மை கொண்டவை.


அசோலா

அசோலாவில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அதிகம் உள்ளன.

  • உலர்ந்த நிலையிலுள்ள அசோலாவில் புரத சத்து - 25-35 %, தாதுக்கள் - 10-15% மற்றும் அமினோ அமிலங்கள் - 7-10 % உள்ளன.
  • அசோலாவின் செரிக்கும் தன்மை கால்நடைகளில் மிகவும் நன்றாக இருக்கிறது.
  • அசோலாவை தனியாகவும் அல்லது அடர்தீவனத்துடன் கலந்தும் கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.
  • செம்மறியாடுகள், வெள்ளாடுகள், பன்றிகள், கோழிகள் மற்றும் முயல்களுக்கும் தீவனமாக அளிக்கலாம்மர நிழல் உள்ள சுத்தமான, சமமான இடத்தை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.

  • மர நிழல் உள்ள சுத்தமான, சமமான இடத்தை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.
  • செங்கல்களை பக்கவாட்டில் அடுக்கி 2 மீ X 2 மீ அளவுள்ள தொட்டி போல் அமைத்து கொள்ளவேண்டும்.
  • புல் மற்றும் மர வேர்களின் வளர்ச்சியை அசோலா குழியினில் தடுக்க தொட்டியின் கீழே உர சாக்கினை பரப்பி விட வேண்டும்
  • அதன் மேல் சில்பாலின் பாயை ஒரே சீராக பரப்பிவிட வேண்டும்.
  • சில்பாலின் பாயின் மீது 10-15 கிலோ சலித்த செம்மண்ணை சம அளவில் பரப்பிவிட வேண்டும்.
  • புதிய சாணம் 2 கிலோ மற்றும் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை 10 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
  • மேலும் தண்ணீரை 10 செ.மீ. உயரம் வரை ஊற்ற வேண்டும்.
  • 500 - 1 கிலோ அசோலா விதைகளை அதன் மேல் தூவி லேசாக தண்ணீர் தெளிக்கவும்.
  • ஒரு வாரத்தில் அசோலா நன்றாக வளர்ந்து தொட்டி முழுவதும் பரவி இருக்கும்.
  • தினமும் 500 கிராம் அசோலா அறுவடைக்கு புதிய சாணம் 1கிலோ மற்றும் 20 கிராம் சூப்பர் பாஸ்பேட்டு கலந்த கலவையை ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு முறை தொட்டில் இடவேண்டும்.
  • மெக்னீசியம், இரும்பு, தாமிரம் மற்றும் சல்பர் கலந்த நுண்ணூட்ட கலவையை ஒவ்வொரு வாரத்திற்கு ஒருமுறை இட்டால் அவை அசோலாவில் தாது உப்புகளின் அளவை அதிகரிக்கும்.
  • மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றி புதிய மண்ணை இடவேண்டும்.
  • 10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரை ஊற்ற வேண்டும்.
  • அசோலா விதைகளை தவிர ஆறு மாத்த்திற்கு ஒரு முறை அனைத்து இடு பொருட்களையும் வெளியேற்றி பின்னர் புதியதாக இடுபொருட்களை சுத்தமான சரியான அளவில் இட்டு தயார் செய்ய வேண்டும்.

அசோலா பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து விடும். பின்பு நாள் ஒன்றுக்கு 500 கிராம் முதல் 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.

  • ஒரு சதுர செ.மீ. ஓட்டை அளவுள்ள சல்லடையை பயன்படுத்தி அறுவடை செய்யலாம்.
  • அசோலாவை சுத்தமான தண்ணீரில் அலசினால் சாணத்தின் வாசனை இல்லாமல் இருக்கும்.
  • புதிய சாணத்திற்க்கு பதிலாக சாண எரி வாயு கலனில் இருந்து வெளியேறும் சாணத்தை உபயோகப்படுத்தலாம்.
  • குளியலறை மற்றும் மாட்டுகொட்டகையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அசோலா குழியில் நிரப்ப பயன்படுத்தலாம்.
  • வெப்பநிலை 200C - 280C
  • வெளிச்சம் 50% சூரிய ஒளி
  • ஈரப்பதம் 65 - 80%
  • தொட்டில் நீரில் உயரம் 5-12 செ.மீ

  • அசோலாவை சல்லடை கொண்டு அலசும்போது கிடைக்கும் நீரில் உள்ள சின்ன சின்ன அசோலா நாற்றுகளை திரும்ப தொட்டியில் ஊற்றலாம்.
  • தொட்டியில் உள்ள நீரின் வெப்பநிலையை 250C கீழே இருக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும்.
  • நிழல் வலைகளை உபயோகப்படுத்தி வெளிச்சத்தின் அளவை குறைக்கலாம்.
  • அசோலாவை தினமும் அறுவடை செய்து தொட்டியில் ஏற்படும் இடநெருக்கடியை குறைக்கலாம்.

Sunday, April 8, 2012

பில்லூர் சாம்பசிவம் கொடுக்கும் பிரச்சனைகளுக்கு ஓர் தீர்வு ,

என்னங்க இது?

தூக்கம் வரலீங்கறதே ஒரு பிரச்னை;

அதோடு பல பிரச்னைகளையும் நெனச்சுப் பார்த்து,

தூங்கப்போனா தூக்கம் வருங்களா?’

இது பலரது கேள்வி. நியாயமானதுதான்.
எந்தவிதமான பிரச்னைகளுடன் தூங்கச்செல்வது என்பது மிக முக்கியம். நமது உடல் பலம், மனோசக்தி இரண்டுமே பெரும்பாலான பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வுகளைக் கொடுத்துவிடும். இதற்கும் மேலாக, தீர்வுகளே தெரியாத பிரச்னைகள் எல்லோருக்குமே உண்டு. ஒரு சிலவற்றைமற்றவர்களிடம் கூறி, ஆலோசனை பெறலாம். சிலவற்றையாரிடமும் கூறமுடியாது பிரச்னைகள்
பிரச்னைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. பிரச்னைகளைப் பெரிதாக நினைத்துக் கொண்டால், தைரியம் குறைந்து, பயம்வந்து வாழ்க்கை மோசமாகிவிடும். பிரச்னைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். ஒருவருக்குப் பிரச்னையாக இருப்பது வேறொருவருக்கு பிரச்னையாக இருக்காது.


  1. ஒருவர் தமது பேச்சாலும், செயல்பாட்டாலும் தமக்கு உருவாக்கிக் கொள்ளும் பிரச்னைகள் ஒருபக்கம்.
  2. மற்றவர்களாலும், இயற்கையாலும் உண்டாகும் பிரச்னைகள் மறுபக்கம்.

இவற்றுள் சிறிது எச்சரிக்கையாக விழிப்புநிலையில் இருந்தால், தாமே உண்டாக்கிக் கொள்ளும் பிரச்னைகள் வராமல் காத்துக் கொள்ள முடியும். அதையும் மீறி, பிரச்னைகள் வந்தால், முதலில் அவைகளை ஒப்புக்கொள்ளும் மனநிலை தேவை. அதன்பின் ஆராய்ந்து பார்த்து, என்ன பிரச்னை எனக் கண்டறிந்து, நீக்குவதற்குத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அப்பிரச்னை முடிவுக்கு வரும்.

ஓர் சிறிய கதை
சேகர் தன் பெற்றோருடன் கோவையிலிருந்து டெல்லிக்கு ரயிலில் செல்கிறான். அவனுக்கு ரயிலில் சைடு லோயர் பெர்த் டிக்கெட் வாங்கியிருந்தனர். தான் நன்றாகத் தூங்க வேண்டுமென்று, மேல் (அப்பர்) பெர்த் பயணியிடம் கேட்டு, இடத்தை மாற்றிக்கொண்டான். இரவுப்பயணம் சுகமாய்க் கழிந்தது. பகல் பயணத்தில் மிகுந்த சிரமப்பட்டான்; தன் பெற்றோரின் உதவியை நாடினான். அவர்களும் அந்தப் பயணியிடம் பக்குவாய் பேசி, பகலில் அவர்கள் மகன் கீழ் பெர்த் இரவில் மேல் பெர்த் என்று பயணம் செய்ய உதவுமாறு ஏற்பாடு செய்தனர். யோசித்தால், இந்த பெர்த் மாற்றமே அவசியமில்லாதது என அறியலாம். இரண்டு நாட்கள் பயணம், கிடைத்த இடத்தை ஏற்றுக்கொள்வது தான் பிரச்னைகளைத் தராது.
மற்றவர்களாலும், இயற்கையாலும் வரும் பிரச்னைகளுக்குத் தமது அனுபவம், அனுபவசாலிகள், பெரியோர்களது ஆலோசனை ஆகியவற்றின் உதவியால் தகுந்த தீர்வு பெறமுடியும். சில சமயங்களில் ஒரு பிரச்னைக்குப் பல தீர்வுகள் கிடைக்கும். எதை ஏற்றுக்கொள்வது என்று குழப்பமாயிருக்கும். இதுபோன்றபிரச்னைகளை ஆழ்மனதுக்கு அனுப்பிவிட்டால், சரியான தீர்வு கிடைக்கும்.
நம்மால் தீர்க்கக்கூடியவை, நம்மால் தீர்க்க முடியாதவை என்றவகையில் பிரச்னைகளைப் பிரித்துவிட்டால், மிகச்சுலபமாக அவைகளைக் கையாள முடியும். உதாரணமாக ஊழல் என்பது பெரிய, முக்கிய பிரச்னைதான். தனி ஒருவரால் ஒன்றும் செய்ய முடியாது. நமது கைகளுக்கு அப்பாற்பட்டது என இதை இனம் கண்டு, ஆதரவு மட்டும் தெரிவிப்பதால், நமக்கு பாதிப்பு வராது.
தூக்கம்
ஒரு பயிற்சியின்போது, “எதற்காகத் தூங்குகிறோம்எனக்கேட்டதற்கு, “தூக்கம் வருகிறது; அதனால் தூங்குகிறோம்என்று பலர் கூறினர்.
நம் உடல் செல்கள் சோர்வடைந்த தம்மைப் புதுப்பித்துக்கொள்ளவும், சக்தி ஓட்டப் பாதைகளில் (Meridians) உள்ள நரம்புகளைப் பழுது நீக்கவுமே தூக்கம் வருகிறது.
எவ்வலவு நேரம் தூங்குகிறோம்? அதில் ஆழ்ந்த தூக்கம் எவ்வளவு நேரம், அதிகாலைத்தூக்கம், பகல் நேரத்தூக்கம் எனப் பலவகையாகப் பிரித்து அறிய வேண்டும். பகல் நேரத்தூக்கம், தூக்கமாக இல்லாமல், ஓய்வாக இருப்பது நல்லது. அதிகாலைத் தூக்கம் (4 முதல் 6 மணி) தவிர்க்கப்பட வேண்டும். இரவு 11 மணிமுதல் காலை 3 மணிவரை ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும்.
தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பே இரவு உணவை முடித்திருப்பதும், குறைந்தது 1 மணிநேரம் முன்பே தொலைக்காட்சியை அணைப்பதும் சிறந்தது. நல்ல புத்தகங்கள் படித்து, அந்த நினைவுகளுடன், அல்லது தீர்வு தேவைப்படும் முக்கியமான பிரச்னைகளின் நினைவுகளுடன் தூங்கச் செல்வது ஏற்புடையது.
கனவுகள்
நமது எண்ணங்கள்தான் கனவுகளாகத் தெரிகின்றன” – இது சிலர் கூற்று;
“”நம் ஆழ்மனதின் வெளிப்பாடே கனவுகள்
-
இது ஆராய்ச்சியாளர்களின் முடிவு;
“”உறக்கத்தில் மனதில் அனுபவம். உருவம், சப்தம், உணர்ச்சி இவற்றின் தொடர்காட்சிகளே கனவுகள்” – இது ஆன்மீகவாதிகளின் அறிவிப்பு.
பொதுவாக நமது எண்ணங்கள்தான் உறக்கத்திலே காட்சிகளாக வடிவம் பெற்று கனவுகள் என்று பெயர் பெறுகின்றன.
கனவு என்பது தூக்கத்தில் வருவதல்லÐ உன்னைத் தூங்கவிடாமல் செய்வதுஎன்றார் இன்றைய இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் முன்னாள் பாரத குடியரசுத்தலைவர் திரு. அடஒ அப்துல்கலாம் அவர்கள்.
ஒரு மனிதனின் சராசரியான வாழும் காலத்தில் 10ல் 1 பங்கு கனவுக்காலமாய் கழிகிறது.
தினமும் சுமார் 2 மணிநேரம் கனவு காண்கிறோம்.
ஒரு மணி அல்லது ஒன்றரை மணிநேர இடைவெளியில் 5 முதல் 15 நிமிட நேரம் நீடிக்கும். காட்சிகளைக் கனவாய் காண்கிறோம். அதிகாலைக் கனவுகள் 15 நிமிடங்களுக்கும் அதிக நேரம் நீடிக்கும்.
ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிக அளவில் கனவுகள் வருகின்றன.
நேர்மறையானதைவிட எதிர்மறையான காட்சிகளே அதிகம் வருகின்றன (பல பிரச்னைகளில் சிக்கித் தடுமாறுவது, உயிருக்கு பயந்து ஓடுவது போன்றவை).
Rapid Eye Movement (REM) மிக வேகமான கண் அசைவு கனவை உருவாக்கும். நம் மூளையின் முன்பகுதியும் நடுப்பகுதியும் தூண்டப்படுவதே, கண் அசைவுக்குக் காரணம். பெரும்பாலும் தஉங தூக்கத்தில் தோன்றும் கனவுக்காட்சிகள் மறந்துவிடும். கனவின் மொத்த சதவீதத்தில் இவை 90 சதவிகிதத்திற்கும் கூடுதலாகும்.
சர்ய் – Rapid Eye Movement (NREM) கண் அசையாமல் தூங்கும்நிலை. இந்நிலையில் காட்சிகளாய் காணும் கனவுகள். காலை எழும்போது நினைவில் நிற்கும்.
ஆழ்மனம்
நமது மனத்தை மூன்று நிலைகளாகப் பிரித்து வைத்துள்ளனர்.
மேல் அல்லது புறமனm Conscious Mind
நடுமனம் Sub-Conscious Mind
ஆழ்மனம் Super Conscious Mind
மேல் மனம் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் செயல்படும்; அவற்றைப் பதிவு செய்யும்.
நடுமனம் பழக்கத்தின் அடிப்படையில், விருப்பத்தின் அடிப்படையில் செயல்படும்; அவைகளைப் பதிவு செய்யும்.
ஆழ்மனம் விருப்பு வெறுப்பின்றி, நியாய உணர்வுடன், தெய்வீக சிந்தனையுடன் செயல்படும்; அவைகளைப் பதிவு செய்யும். தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கான சரியான தீர்வைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும்.

தீர்வுகள்
ஒரு பூட்டு தயாரிக்கும்போதே, அதற்குப் பல சாவிகள் தயாரிப்பது போல, எந்தப் பிரச்னையும் வரும்போதே, பலவிதமான தீர்வுகளுடனேயே வருகின்றது. நபருக்கு நபர் பிரச்னையா, இல்லையா என்பதும், தீர்வுகளும் வேறுபடும்.
ஒருவருக்குள்ள பிரச்னை தீர ஒருவிதமான செயல்பாடு தேவையென்றால், வேறொருவருக்கு இதே பிரச்னைக்கு இதே செயல் தீர்வாக அமையாமலும் போக வாய்ப்புண்டு.
ஒருவருக்குத்தம் 60வது வயதில் கண்பார்வையில் கோளாறு, நண்பர்கள், உறவினர்கள் எனப்பலரும் அக்கறையுடன் பல ஆலோசனைகள் கூறுகின்றனர். எல்லாமே நல்லவைதான். ஆனால், எந்த ஆலோசனையைச் செயல்படுத்துவது என்பதில் இவருக்கு குழப்பம். காரணம் ஆலோசனை கூறிய அனைவருமே உண்மையிலேயே இவர் மீதுள்ள அன்பினால்தான் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இவற்றுள் எந்த ஆலோசனைப்படி செயல்பட்டால், பிரச்னை சரியாகும் என்று எண்ணி உறங்கச் செல்ல வேண்டும். தொடர்ந்து எண்ணும்போது சரியானதீர்வு அவருக்கு ஏதோ ஒரு காட்சி மூலம் கனவாகத் தெரியும்.
தையல்மிஷின் ஊசி
கையால் தைக்கும் ஊசியில் நூல்கோர்க்கும் துவாரம், கூர்மையான பகுதிக்கு எதிர்ப்பகுதியில் இருக்கும். ஆனால் தையல்மிஷினில் உள்ள ஊசியில் கூர்மையான பகுதியிலேயே நூல்கோர்க்கும் துவாரம் இருக்கும். இதைக்கண்டு பிடித்தவர் பல நாட்களாக முயன்றும் தீர்வு கிடைக்காத நிலையில், இதே நினைவாக உறங்கும்போது, அவர் கண்ட கனவிலிருந்து, கூர்மையான பகுதியில் துவாரமிட்டு ஊசியை வடிவமைத்தார்.
உறக்கத்தில் கண்ட கனவில் இவர் ஆதிவாசிகள் வாழும் காட்டுப்பகுதிக்குச் சென்றுவிட்டார். அவர்கள் இவரைத் தம் தலைவனிடம் அழைத்துச் செல்கின்றனர். தலைவனோ, இவரை கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போட்டு, வேகவைத்து, விருந்துண்ணுமாறு ஆணையிட்டான். மகிழ்ச்சியில் ஆதிவாசிகள் கையிலிருந்த ஈட்டி போன்றகூர்மையான ஆயுதத்தால் நிலத்தைத் தொட்டுதொட்டு, இவரைச் சுற்றி ஆடிவந்தனர்.
கூர்மையான பகுதி கீழே மேலே சென்று வருவதைக் கண்ட இவருக்கு, அந்தப்பகுதியில் துளைபோட்டு நூலைக்கோர்க்கும் எண்ணம் வந்தது. தூக்கம் கலைந்தது. கனவு முடிந்தது. தையல் ஊசி கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோல் பலவற்றைக் கூறலாம்.
எனவே, எந்தப் பிரச்னையாலும் தீர்வுகள் இல்லாமல் வருவதேயில்லை எனத்திடமாக நம்ப வேண்டும்.
அந்தத் தீர்வுகளைத் தேடித்தாகத்துடன் உறங்கச் செல்ல வேண்டும்.
முழுமன ஈடுபாடு, கட்டாயம் தீர்வுகளுடன் உறக்கத்திலிருந்து நம்மை எழுப்பும்.